நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது மிக நீளமான 162-நிமிட பட்ஜெட் உரையை சனிக்கிழமையன்று தாக்கல் செய்தார். ஆனால் பட்ஜெட் ஆவணங்களை முழுவதும் படிக்க முடியாத அளவுக்கு அவர் சோர்வடைந்தார் . இதனால் பட்ஜெட் அறிக்கையில் கடைசி இரண்டு பக்கங்களை மட்டும் அவர் படிக்கவில்லை . அவரது சோர்வு அவரது பார்வையாளர்களிடையே பிரதிபலித்தது - பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, இலட்சக்கணக்கான வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொலைக்காட்சி வழியாக பார்த்து கொண்டு இருந்தோரும் சோர்வடைந்தனர் - இந்நீளமான உரையால்!. கொள்கை நுணுக்கம், தத்துவம் மற்றும் காஷ்மீரி, தமிழ் கவிதைகளால் நிறைந்திருந்த அறிக்கையானது, வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பு , பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நுகர்வு மறுமலர்ச்சி போன்ற சவால்களை எதிர்கொள்ளக்கூடிய யோசனை இல்லாதது போல் தோன்றியது. சில ப்ளஸ்கள் இந்த பட்ஜெட் அறிக்கையில் நேர்மறையான உணர்வுகளை தூண்டக்கூடிய அறிவிப்புகள் இல்லை என ஒரேயடியாக கூற முடியாது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) ஒரு ஐபிஓ மூலம் அரசாங்கத்தின் பங்குகளை நீர்த்துப்போகச் செய்வதற்கான நடவடிக்கையை சீதாராமன் தைரியமாக அறிவித்தார். நிறுவனங்களின் கைகளில் ஈவுத்தொகை விநியோக வரியை நீக்கிவிட்டது; உள்கட்டமைப்பு துறையில் செல்வ நிதிகளின் முதலீடுகளுக்கு 100 சதவீத வரி விலக்கு; வங்கி வைப்புகளுக்கான காப்பீட்டு உத்தரவாதத்தை ஒரு வைப்புத்தொகருக்கு ரூபாய் 5 லட்சம் (ரூபாய் 1 லட்சத்திலிருந்து) வரை நீட்டித்தது; பிரதமர் நரேந்திர மோடி கண்டும் காணாமல் இருந்த சமூக நலன் மற்றும் விநியோக திட்டங்களுக்கு மேம்பட்ட செலவினங்கள் ஒதுக்கியது என சில நல்ல அறிவிப்புகளும் இருந்தன

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களை இலக்காகக் கொண்ட வரி குறைப்பு ‘சீர்திருத்த’ நடவடிக்கையை கூட அவர் வெளியிட்டார்; ஆனால், நுண்விவரங்களில் மூழ்கியுள்ள இந்த திட்டத்தால் வரி செலுத்துவோர் எதையும் பெறுவார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை. அல்லது இந்த ரூபாய் 40,000 கோடி ‘துறக்கப்பட்ட வருவாய்’ நுகர்வு உந்துதலுக்கு ஊக்கமளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, பட்ஜெட்டின் எண்கள் பொருளாதாரத்தை மலர செய்வதற்கான நம்பிக்கையைத் தூண்டுவனவாக இல்லை.  ஒன்று, 2020-21 நிதியாண்டிற்கான பெயரளவு வளர்ச்சி விகிதத்தை (அதாவது பணவீக்கம் உட்பட) 10 சதவீதமாக பட்ஜெட் கணித்துள்ளது, இது அதிக நம்பிக்கையுடன் தெரிகிறது. முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் - இந்த ஆண்டின் இலக்குகளை அடைய முடியாமல் போனதிலிருந்து - யதார்த்தத்திலிருந்து ஓரளவு தொலைவில் இருப்பதாகத் தெரிகிறது.

பங்குச் சந்தை வீழ்சசி  நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் (Fiscal Responsibility and Budget Management Act) கீழ் நிதி பற்றாக்குறை இலக்கை அரை சதவீத புள்ளியில் தளர்த்துவதன் மூலம் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுகளில் செலவழிக்க வழிவகை செய்தார். அரசாங்க கடன்களால் தனியார் முதலீடுகள் கூட்டமாக இருக்காது என்பதை உறுதி செய்வதாக அவர் கூறிய போதிலும், பட்ஜெட்டின் பின்னால் உள்ள கணிதம் பல மோசமான அனுமானங்களில் தங்கியுள்ளது. திட்டமிட்டபடி பொருளாதாரம் புத்துயிர் பெறாவிட்டால், அல்லது முதலீட்டு இலக்குகள் மிகக் குறைந்துவிட்டால், அடுத்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்த அவருக்கு இடமில்லாத படி போகும் . இந்த நிலையில் பங்குச் சந்தை பெரும் வீழ்சசி அடைந்ததில் ஆச்சரியம் இல்லை. நாள் முடிவில், சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 1,000 புள்ளிகள் அல்லது 2.4 சதவீதம் சரிந்தது.

எதிர்வினைகள்  பட்ஜெட்டுக்கான எதிர்வினைகள் பலவாறாக இருந்தன. மோடி அதைப் பாராட்டினார், மேலும் அதற்கு "பார்வை" மற்றும் " செயல்" இருப்பதாகவும், அதில் கூறியுள்ள திட்டங்கள் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்றும் கூறினார். முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்திடம் அவர் பட்ஜெட்டுக்கு 1-10 வரையிலான அளவுகோலில் என்ன மதிப்பீட்டைக் கொடுப்பார் என்று கேட்டதற்கு: “எண் 10 க்கு இரண்டு இலக்கங்கள் உள்ளன: ஒன்று மற்றும் பூஜ்ஜியம்; அவற்றில் ஒன்றை நீங்கள் எடுக்கலாம்," என கூறினார். பக்கச்சார்பான அரசியல் ஒருபுறம் இருக்க, கடுமையான மந்தநிலையை எதிர்கொள்ளும் அவசர உணர்வு இந்த நிதியாண்டின் பட்ஜெட்டுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. பட்ஜெட்டில் பல பாகங்கள் உள்ளன, ஆனால் அவை பெறாதவையாகவே உள்ளன. மிகச்சிறிய விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதில், அது முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டதாகவே தெரிகிறது.

Translated by Gayathri G