சிறு, குறு, நடுத்தர வியாபாரம் செய்பவர்களின்‌ கடன்களுக்கு அரசாங்கம் 100% உத்தரவாதம்  

Our Bureau Updated - December 06, 2021 at 12:34 PM.

குறு, சிறு தொழில் மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ) வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி) வழங்கயிருக்கும் ₹3 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களுக்கு 100 சதவீத கடன் உத்தரவாதத்தை அரசாங்கமே வழங்கும்.

தொற்றுநோய் காரணமாக இவைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டு சிக்கல்களை பூர்த்தி செய்வதற்கும், மூலப்பொருட்களை வாங்குவதற்கும், வணிகத்தை மறுதொடக்கம் செய்வதற்கும், வணிகங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால், வழங்கப்படும் உத்தரவாதம், வங்கிகளின் பொறுப்பு சிக்கல்களை தவிர்க்கும்.

கடன்கள் செயல்படாமல் போகலாம் என்ற அச்சமின்றி அவர்கள் கடன் வழங்குவதை மீண்டும் தொடங்கலாம். அக்டோபர் 31 வரை இந்த உத்தரவாதத்தைப் பெறலாம்.

நிதியுதவி வழங்குவதற்காக ₹30,000 கோடி சிறப்பு பணப்புழக்க திட்டத்தையும், ₹45,000 கோடி ‘பகுதி கடன் உத்தரவாத திட்டம் 2.0’,  மூலம் கிடைக்கும் நிதி ஆதரவினால், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் (எச்.எஃப்.சி) மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் (எம்.எஃப்.ஐ) உள்ளிட்ட என்.பி.எஃப்.சி. நிறுவனங்கள் இந்த உத்தரவாத அறிவிப்பின் மூலம்  கடன் வழங்குவதை அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

45 லட்சம் யூனிட்டுகளுக்கு அரசாங்கம் அளிக்கும்  உத்தரவாதம் மூலம் கடன்கள் வழங்கப்படும். இதனால் அவர்கள் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம். மேலும், வேலைகளுக்கு பாதுகாப்பு தர முடியும். அவர்கள் வாங்கிய கடனை 4 வருட காலத்தில் திருப்பி செலுத்தலாம். மேலும் அசலை  திருப்பிச் செலுத்துதலில் 12 மாத கால அவகாசமிருக்கும். எந்த விதமான உத்தரவாதக் கட்டணமும் மற்றும் எந்தவொரு புதிய பிணைத்தொகையும்  இருக்காது.

 

கடன்கள் அரசாங்கத்தால் 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கப்படுவதால், வட்டி விகிதம் பொறுத்தவரை முற்றுப்புள்ளி இருக்கும். இருப்பினும், வணிகங்களுக்கான பிணை இல்லாமல் தானகவே வழங்கும் கடன்களின் திட்டத்திற்கு வட்டி விகிதங்களின் உச்சவரம்பைக் குறிப்பிடவில்லை.

 

இந்த திட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சிக்கள், பிப்ரவரி 29 வரை நிலுவையில் உள்ள கொடுக்க வேண்டிய மொத்த கடனில் 20 சதவீதம் வரை வணிகங்களுக்கு அவசர கடனாக வழங்கும்.

ரூபாய்  25 கோடி வரை வாணிபத்தில்  வர வேண்டியது உள்ளவர்கள்  மற்றும் ரூபாய் 100 கோடி அளவில்  விற்றுமுதல் கொண்டவர்கள்   இந்த திட்டத்தின் கீழ் கடன்களுக்கு தகுதியுடையவர்கள்.

Published on May 14, 2020 04:53