பாலிகேப் இந்தியா ((Polycab India) Q3 அபாரம், நிகர லாபம் 14% உயர்வு

K. S. Badri Narayanan Updated - January 22, 2020 at 10:25 AM.

பாலிகேப் இந்தியா (Polycab India) டிசம்பர் காலாண்டில் தனது நிகர லாபத்தை 14 சதவீதம் கூட்டி 221.40 கோடியாக அறிவித்துள்ளது.  முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இந்த நிறுவனம் ரூ 193.60 கோடி லாபம் சம்பாதித்திருந்தது. மொத்த வருவாய் ரூ 2,507.60 கோடியாகும் (ரூ 2,048.60 கோடி). முந்தைய ஆண்டின் காலாண்டைவிட இது 11 சதவீதம் அதிகமாகும். மின்கம்பி உற்பத்தி மற்றும் வர்த்தகம் செய்யும் பாலிகேப் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜெய்சிங்ஹானி கடந்த காலாண்டு ஒரு சிறந்த வளர்ச்சியை தங்கள் நிறுவனம் அடைந்ததாக பெருமிதம் கொள்கிறார். தங்கள் பொருள்களின் விநியோகம் இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடு சந்தையிலும் சிறப்பாக இருந்ததால், ஒரு உன்னத வளர்ச்சியை தங்கள் கம்பெனி அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

Published on January 22, 2020 03:11