நாடு முழுவதும் பெரிய தனியார் படகுகள் மற்றும் இழுவைப் படகுகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மீனவர்கள் சரியான உணவு மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை நிலைமைகள் இல்லாத நிலையில் “பெரும் கஷ்டங்களை” எதிர்கொண்டிருக்கின்றனர். லாக் டவுன் காலத்தில் அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று அவர்கள் கோரியுள்ளனர்.
உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு எழுதிய கடிதத்தில், சிறுதொழில் மீன் தொழிலாளர்களுக்கான தேசிய தளம் (என்.பி.எஸ்.எஸ்.எஃப்.டபிள்யூ), உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ), புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினையில் அரசாங்கம் உதவாதென்றும், பொதுவாக 'அவர்கள் பணிபுரியும் இடங்களை வசிப்பிடமாகவும் ஏற்றுக்கொள்கிறார்கள்,' என்றும், அவர்களின் சொந்த இடங்களுக்குத் திரும்புவது நியாமில்லை என்று சமீபத்தில் தெளிவுபடுத்தியிருந்தது.
மார்ச் 24 அன்று லாக் டவுன் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்தத் துறையில் உள்ள தொழிலாளர்களின் நிலைமைகள் சிரமமாக உள்ளது; உணவு மற்றும் நீர் மறுக்கப்படுவது மற்றும் ஊதியம் வழங்காதது போன்ற பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நோய்வாயில் தவிப்பு
படகுகளில் கூட்டமாக இருப்பது, போதுமான உணவு மற்றும் தண்ணீர் இல்லாமை, மருத்துவ வசதிகள் நிராகரிப்பு ஆகிய காரணங்களால் அவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர், ஒரு சில தொழிலாளர்கள் இறந்தும் விட்டனர் என்று மே 7 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்.பி.எஸ்.எஸ்.எஃப்.டபிள்யூ (NPSSFW) புலம்பெயர்ந்த மீன் தொழிலாளர்கள் அனைவருமே தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு அதிகாரிகள் வசதி செய்து கொடுக்க வேண்டுமென்று உள்துறை அமைச்சகத்தை (MHA) கேட்டுக் கொண்டுள்ளது.
புலம்பெயர்ந்தோரின் பற்றி உள்துறை அமைச்சகத்தின் (MHA) இறுதியாகச் சொல்லப்பட்ட விளக்கத்தின் விளைவாக, மீனவர்கள் மீதான தனது பொறுப்பை நிர்வாகம் தட்டிக் கழிக்கும் விதமாக உள்ளது. மீனவர்கள் திரும்பிச் செல்ல அனுமதிப்பது குறித்து மத்திய அரசிடம் ஒரு தெளிவான அறிவுறுத்தல் இருக்கவேண்டும், என்று என்.பி.எஸ்.எஸ்.எஃப்.டபிள்யூ, கன்வீனர் பிரதீப் சாட்டர்ஜி பிசினஸ்லைனிடம் தெரிவித்தார்.
குரல் ஒலிக்கவில்லை
குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் மீன்பிடிக்கும் கப்பல்கள் மற்றும் மீன் தரையிறங்கும் இடங்களில், ஆயிரக்கணக்கான மீனவர்கள் சிக்கித் தவிக்கின்றனர், மேலும், அவர்கள் தங்கள் கிராமங்களுக்குத் செல்ல விரும்புகிறார்கள், என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
எங்கள் அமைப்பு, பெரும்பாலும் சிறிய மீனவர்களின் பிரதிநிதியாகச் செயல்படும், அதே வேளையில், புலம்பெயர்ந்த மீன் தொழிலாளர்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. அவர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவக் குரல்கள் இல்லை என்பதால் நாங்கள் அவர்களின் பிரச்சினைகளை எடுத்துள்ளோம். அவர்கள் படகுகள் மற்றும் இழுவைப் படகுகளில் பல மாதங்களாக வேலை செய்கிறார்கள், பெரும்பாலும் அவர்கள் கொத்தடிமைத் தொழிலாளர்கள் போல் நடத்தப்படுகின்றனர். லாக் டவுன் காலத்தில், பலருக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு வழங்கப்படுகிறது, மிகக் குறைந்த தண்ணீரும் கிடைக்கிறது,” என்று சாட்டர்ஜி கூறினார்.
மீன்பிடிக்கத் தடை
உள்துறை அமைச்சகம், மிக விரைவில் புலம்பெயர்ந்த மீன் தொழிலாளர்களை அவர்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கவேண்டும். காரணம், கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் மத்திய அரசு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், லாக் டவுனும் சேர்ந்து கொண்டுள்ளதால், அவர்களுக்கு நீண்ட காலம் ஊதியமில்லாத நாட்களாக இருக்கும் என்று, கடிதத்தில் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சகம், மீன்வளத் துறையுடன் இணைந்து, தொழிலாளர்களை நகர்த்துவதற்குத் தேவையான தகவல்களைத் திரட்ட பல்வேறு மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மாநிலத் துறைகளைக் கேட்கலாம் என்று என்.பி.எஸ்.எஸ்.எஃப்.டபிள்யூ மேலும் கூறியுள்ளது.
"62 மீன்பிடித் துறைமுகங்கள், 181 தரையிறங்கும் மையங்கள் மற்றும் நாட்டின் கடற்கரைகளைச் சுற்றி மொத்தம் 2,69,047 மீன்பிடி படகுகள் இருப்பதால், அனைத்து தொழிலாளர்களின் தேவைகளும் ஒருங்கிணைந்த திட்டமில்லாமல் செய்வது சாத்தியமற்றது" என்று அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.