ஐந்து நிமிடங்களுக்குள் நிதி பரிமாற்றம், பில் செலுத்துதல் மற்றும் மொபைல் போன்கள் அல்லது இணையத்தின் மூலம்  வங்கிக்  கணக்கு தொடங்குதல் போன்றவற்றை முடித்துவிடக்கூடிய‌ இந்தக் காலக் கட்டத்திலும்,

பெருநிறுவனங்களின் உலகம் இன்னும் பழைய பழக்கத்தில் தான் இயங்குகிறது.  அங்கு நேரிடையான (காகித அடிப்படையிலானன) பரிவர்த்தனைகள் தான் இன்னும் ஆளுமையில் உள்ளன.

உதாரணமாக, ஒரு எளிய நிதி பரிமாற்றம் அல்லது ஒரு நிலையான வைப்புத் தொகை வைக்குதல் போன்றவைகளக்கு,  நிறுவனத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நபர்களால் கையொப்பமிடப்பட்ட கடித அறிவுறுத்தல்கள் தேவைப்படுகின்றன. உத்தரவுகளைப் பின்னர் தொலைநகல், அஞ்சல் அல்லது தூதஞ்சல் மூலமாக வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு மேம்படுத்தப்பட்ட பரிவர்த்தனையை விட, கடிதங்கள் மற்றும் நடைமுறைகள் அதிக வேலைகளை எடுத்துக்கொள்கின்றன.

 

இதற்கு பெருநிறுவனங்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கிடைக்கவில்லை என்பது காரணமல்ல. ஏறக்குறைய அனைத்து வகையான பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறையில் செயலாக்குவதற்கான திறனும், உள்கட்டமைப்பும் வங்கிகளுக்கு இருந்தாலும், பெருநிறுவனங்கள் தரப்பிலிருந்து அதை ஏற்றுக்கொள்வது  மிகக் குறைவாகவே உள்ளது.

மாற்றம், முன்னேற்றம்

ஆனால் கோவிட்-19 தொற்றுநோயினால் கடந்த சில வாரங்களாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

தொற்றுநோயால் தூண்டப்பட்ட லாக்  டவுன் மக்களை வீட்டிலிருந்து வேலை செய்யக் கட்டாயப்படுத்துவதால், அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர்கள் இல்லாததாலும், அறிவுறுத்தல்களை வங்கிக்கு நேரிடையாக அனுப்புவது இயலாத காரணமாகவும், நிறுவனங்கள் பரிவர்த்தனைகளைக் செயலாக்குவதில் கடினம் காண்கின்றனர். இதன் விளைவாக, பல நிறுவனங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்க ஆர்வம் காட்டுகின்றன.

 பெருநிறுவனங்களின் வணிகத்தைக்  கணிசமான பகுதியை வெளிநாட்டு வங்கிகள் வைத்திருப்பதால், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நல்ல அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது நிறுவனங்களின் ஆர்வத்தைத் தவிர, இதுவரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச்  செய்யாதவர்களும் ஏற்கின்றனர்

"நாங்கள் பல ஆண்டுகளாக டிஜிட்டல் சேவையை வைத்திருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்வதும்  நன்றாக இருந்தன, ஆனால், அது நாங்கள் எண்ணிய  அளவுக்கு விரிவடையவில்லை. ஆனால், இந்த நெருக்கடியில், டிஜிட்டலுக்கு வரத்  தயங்கிய மக்கள் கூட இப்போது மாற விரும்பிகிறாரகள்," என்று எச்எஸ்பிசி இந்தியாவின் வணிக-வங்கியின் தலைமை அதிகாரி ரஜத் வர்மா கூறுகிறார். தவிர, டிஜிட்டலின் நன்மைகள் குறித்த தெளிவு மேலும் அதிகரித்து வருவதால், மக்கள் மனநிலையில்  மாற்றம் ஏற்பட்டுள்ளது உள்ளது.

மொத்த வங்கி சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியும் டிஜிட்டல் சேவைக்கு பெருநிறுவனங்களின் ஆர்வம் அதிகரிப்பதைக் காண்கிறோம் என்கிறது. இந்த  லாக்  டவுன்  சமயத்தில்,  டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாற  பெருநிறுவனங்களின் ஆர்வத்தில் அதிகரிப்பைக் கண்டோம். அத்தகைய வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வங்கி வழங்கி வருகிறது. நாங்கள் மேற்கொண்ட சில முயற்சிகளில், வாடிக்கையாளர்களுக்கு எங்கள் ஸ்ட்ரெய்ட் 2 பேங்க் (கார்ப்பரேட் இன்டர்நெட் வங்கி தளம்) திறன்களைப் பற்றி தொலைதூர பயிற்சியளிப்பதும், இந்த வசதிக்காகப் பயனர்களைப் பதிவு செய்வதில் அவர்களுக்கு வழிகாட்டுவதும் ஆகும், என்று அந்‌ நிறுவனம் கூறியுள்ளது.

டிஜிட்டலுக்கு மாறுவதில் குறிப்பிடத்தக்கச் செலவு மற்றும் நேர நன்மைகளைக் குறித்துச் சொல்லி வாடிக்கையாளர்களைக் கவர வங்கிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகின்றன.

 

தொழில்நுட்ப பயிற்சி

 

"தொழில்நுட்பத்தைப் பற்றி நன்கு தெரியாத நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். கடந்த காலத்தில் டிஜிட்டலில் அதிக ஆர்வம் காட்டிய வாடிக்கையாளர்களுக்காக, அவர்களின் தற்போதைய செயல்முறைகளைப் பற்றி தெரிந்து கொண்டு, எங்கள் மேம்பட்ட டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்தி செயல்முறைகளில் டிஜிட்டல் மயமாக்குவதற்கான வழிகளை பரிந்துரைப்பது மட்டுமில்லாமல், நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளையும் நடத்தி வருகிறோம்," என்று இந்தியாவின் நிறுவன வங்கி குழு, டி.பி.எஸ் ,இந்தியா (Institutional Banking Group, DBS India)  நிர்வாக இயக்குநரும், நாட்டின் தலைவருமான நீராஜ் மிட்டல்  சொன்னார்.

 

"எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர், பெரிய மற்றும் சிறிய கார்ப்பரேட்டுகள். அவர்கள் எங்கள் டிஜிட்டல் வணிக வங்கி தீர்வுகளிலுள்ள ஆர்வத்தையும் மற்றும் பயனைகளையும் காண்கின்றனர், மேலும், லாக் டவுன் இதை ஏற்பதின் வேகத்தைத் துரிதப்படுத்தியுள்ளது. 2019 ஆண்டின் முதல் காலாண்டை ஒப்பிடும்பொழுது, 2020 ஆம் ஆண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் 29 சதவீதம் உயர்ந்துள்ளதை நாங்கள் கண்டிருக்கிறோம்,” என்று மிட்டல் கூறினார்.

 

மும்பையைச் சேர்ந்த க்ரோ ட்ரஸ்ட் வென்ச்சர்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் P கூறுகையில், சில்லறை விற்பனையில், தீர்மானங்கள் ஒரு நபரின் முடிவைச் சார்ந்திருக்கும். ஆனால், பெருநிறுவனங்களில் பல அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் கையொப்பமிட வேண்டிய சவால்கள் உள்ளன. எனவே டிஜிட்டல் மிகப் பாதுகாப்பாகவும், சுலபமாகப் பயன்படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும். 

 

ஒரு முன்னாள் வங்கியாளரான ராஜேஷ் கூறுகையில்: "டிஜிட்டல் தளங்களை ஏற்கப் பெருநிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும், இலவச பரிவர்த்தனைகள், வங்கி கட்டணம் அல்லது வாடிக்கையாளர்களால் செலுத்த வேண்டிய கட்டணங்கள் ஆகியவற்றில் சில வகையான வரவுகளில்  சரி செய்து கொள்ளலாம். அனைத்து பெருநிறுவன பரிவர்த்தனைகளும் 100 சதவீத டிஜிட்டலுக்கு செல்ல முடியாது என்றும் வங்கியாளர்கள் கூறுகின்றனர். வர்த்தக மற்றும் விநியோக தொடர்பான  பரிவர்த்தனைகளான  லெட்டர்ஸ் ஆஃப் கிரெடிட், வசூல் மற்றும் உத்தரவாதங்கள் போன்றவைகள் செயல்படுத்துவதற்குக் காகித வடிவில் ஆவணங்கள் தேவை.

 

இன்று ஆன்லைனில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இது 2-3 ஆண்டுகளுக்கு முன்னர் சாத்தியமில்லை. அனைத்து அரசாங்க அமைப்புகள் கூட டிஜிட்டலை நோக்கி நகர்கிறார்கள். எனவே எல்லாமே டிஜிட்டலை நோக்கி நகரும்போதுதான் மாற்றம் நிகழும்,  என்று எச்எஸ்பிசியின் வர்மா கூறினார்.

 

Translated by P Ravindran