இந்தியாவின் தூக்கத் தொழில் எனப்படும் மெத்தை தொழில் தற்பொழுது தூக்கமில்லாத இரவுகளைக் கொண்டுள்ளது. சில்லறை வணிகத்தைப் பெரிதும் நம்பியுள்ள இந்த தொழில், லாக் டவுன் காரணமாக விற்பனையில் மிக மோசமான சரிவில் உள்ளது.
ஸ்லீப்வெல் பிராண்ட் என்ற பெயரில் மெத்தை தொழில் வைத்திருக்கும் ஷீலா ஃபோம் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகுல் கவுதம் கூறுகையில், இந்த சீசன் முழுவதும் நிறுவனம் மற்றும் தொழில் ஆகிய இரண்டும் முழுவதுமாக கரைந்து விட்டன.
ஆண்டுதோறும், ஒரு மில்லியன் மெத்தைகளை உற்பத்தி செய்யும் நொய்டாவை தளமாகக் கொண்ட இந்த பிராண்ட், ஒழுங்கமைக்கப்பட்ட மெத்தை துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது.
எங்கள் தொழில்துறையிலுள்ள தேவையில் 90 சதவிகிதம் சில்லறை விற்பனையாகும், மீதமுள்ளவை நிறுவனங்கள் அல்லது வியாபாரத்திற்கு வியாபாரம் (B2B). தரப்பிலிருந்து வருபவையென்று ஸ்ரீ மலானி குழுமத்தின் ஒரு பகுதியான ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட செஞ்சுரி மாட்டர்ஸ்ஸ் நிர்வாக இயக்குனர் உத்தம் மலானி கூறினார், இவர்கள் ஸ்ரீ மலானி ஃபோம்ஸையும் வைத்துள்ளார்கள்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கணிசமான சந்தையை கொண்டுள்ள செஞ்சுரி, ஏப்ரல் மாதத்தில் விற்பனையில் முழுவதுமாக சரிவைக் கண்டது. மே மாதத்தில் இயல்பை விட 10 சதவிகித அளவில் தேவையை எதிர்பார்க்கிறோம், ஜூன் முதல் வழக்கமான தேவைகளில் 50-60 சதவிகித அளவில் செயல்பட ஆரம்பிப்போம், என்று மலானி கூறினார்.
திருமண சீசன்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுவாகத் திருமணங்கள் காலத்தை ஒட்டி மெத்தைகளின் தேவைகள் அதிகரிக்கும் என்று நிறுவனங்கள் எதிர்பார்த்தபொழுது, தொற்றுநோய் தொழில்துறைக்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளது என்று துரோஃப்ளெக்ஸ் மெத்தை நிறுவனத்தின் விற்பனை பிரிவின் துணைத் தலைவர் ஸ்மிதா முரர்கா தெரிவித்தார்.
விற்பனை சரிவு என்பது லாக் டவுன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் காரணமாகவே ஏற்பட்டுள்ளதே தவிர தேவைகள் குறைந்தால் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, துரோஃப்ளெக்ஸின் பெரிய சந்தைககளான மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல பகுதிகள் தற்போது கோவிட் -19 ஒட்டி சிவப்பு மண்டலங்காக உள்ளன. எங்கள் சமூக ஊடகங்களில் 3x வளர்ச்சியையும், இந்த காலகட்டத்தில் கூட வலைத்தள வருகைகளில் 4x வளர்ச்சியையும் நாங்கள் பார்க்கிறோம், இது நுகர்வோர்களின் மெத்தை வாங்கும் விருப்பத்தைச் சொல்கிறது, ஆனால் லாக் டவுன் காரணமாக அது வியாபாரமாக மாறவில்லை என்று முரர்கா கூறினார்.
தொழில்துறை வல்லுநர்களின் கருத்தில் மெத்தைகள் அத்தியாவசிய பொருளாக இல்லாமிலிருப்பதால், லாக் டவுன் நீக்கப்பட்ட பின்னர் நுகர்வோர்களின் முன்னுரிமையாக இருக்காது. லாக் டவுனுக்கு பிறகு மக்கள் செலவிடுவதில் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். அந்தச் சூழலில், திருமணங்கள் மற்றும் புதிய வீடுகளைத் தவிர மெத்தை ஒரு முன்னுரிமைப் பொருளாக இருக்காது என்று கோயம்புத்தூரைச் சேர்ந்த ரெபோஸ் மெத்தை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.பாலசந்தர் கூறினார், இவர்கள் ஸ்ப்ரிங் மெத்தைகளில் சிறப்பானவர்கள். அவர் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியை மக்கள் தூங்குவதற்கு எடுத்துக் கொண்டாலும், ஆனால் அதைக் கொடுக்கும் மெத்தைகளுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று மேலும் அவர் கூறினார்.
மீண்டெழும் நம்பிக்கை
ஆனால் சில தொழில்துறை வல்லுநர்களின் நம்பிக்கையில் எதிர்வரும் மாதங்களில் வர்த்தகம் மீண்டுவரும் என்பதாகும்.
ஒரு மெத்தை பாக்டீரியா மற்றும் பிற நோய்க்கிருமிகளின் மூலத்திலிருந்து வருவது என்று ஸ்லீப்வெல்லின் கவுதம் மேலும் கூறினார். இந்த லாக் டவுன் காலத்தில், மக்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தில் வீட்டில் இருக்கும் பொழுது மெத்தையில் கழித்திருப்பார்கள், எனவே மக்கள் புதிய மெத்தைகளை வாங்குவதில் முன்னுரிமை கொடுப்பார்கள்.
புதிய இயல்புகள் ’ என்று நுகர்வோர் நடத்தை குறித்த ஆராய்ச்சி ஆய்வுகளை மேற்கோள் காட்டி, துரோஃப்ளெக்ஸின் முரர்கா, வீட்டு மேம்பாடுகளுக்கான செலவு என்பது அத்தியாவசியங்கள் மற்றும் சுகாதார செலவினங்களுக்குப் பிறகு நுகர்வோர்களின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.
மெத்தை என்பது மக்களின் 30 சதவீத நேரத்தைச் செலவிடுவதில் எடுத்துக்கொண்டது. லாக் டவுன் காலத்தில் மக்கள் தூக்கம் வராத நேரங்களில் கூட மெத்தைகளில் செலவிடுகிறார்கள், ஏனெனில் பலருக்கு வீட்டில் அவர்களுக்கு என்று தனியாக வேலை செய்வதற்கு ஆடம்பரமான இடங்கள் இல்லை, என்று அவர் மேலும் கூறினார்.
Translated by P Ravindran