கடந்த இரண்டு வாரங்களாக நாடு தழுவிய லாக் டவுன் நிச்சயமாக விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய கிடங்குகள் மூடப்பட்டுள்ளன, போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது மற்றும் போதுமான எண்ணிக்கையில் வேலையாட்கள் கிடைக்கவில்லை.

உற்பத்தியாளர்கள் வேளாண் விளைபொருட்களை அறுவடை செய்து சந்தைப்படுத்த முடியாத நிலையில், நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் வருமானத்தை இழந்து வருகின்றனர். இது கிராமப்புற மக்களை பாதிக்கும். மேலும், துறைமுக நடவடிக்கைகள் முடங்கி உள்ளன.

உடனடி கொள்முதல் தேவை

பொதுவான ஏற்றுமதி மற்றும் அழுகக்கூடிய பொருட்களான, பழங்கள் மற்றும் காய்கறிகள் பாதிக்கப்படுகின்றன. மாம்பழம் போன்ற பழங்களை ஏற்றுமதி செய்ய, இது உகந்த பருவமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிராமப்புற இந்தியா செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், அரசாங்க அதிகாரிகள் முன்னோக்கிச் செல்வதற்குப் பயனுள்ள வழிகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நீக்கலாமா அல்லது நீடிக்கலாமா, என்ன முடிவு எடுத்தாலும் அதில் சிக்கல்கள் இருக்கும்.

விலை ஆதரவு மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தக்கூடாது. எஃப்.சி.ஐ மற்றும் நாஃபெட் (FCI and Nafed ) போன்ற அரசு நிறுவனங்கள் அனைத்து முக்கிய உற்பத்தி பகுதிகளையும் அடைவதற்குத் தயாராக இருக்க வேண்டும். இன்னும் இதுவரை செல்லாத உற்பத்தி பகுதிகளையடைய, அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவாகவும், கொள்முதல், சேமிப்பு மற்றும் பயிர் பாதுகாப்பில் நல்ல அனுபவம் வாய்ந்த தொழில்முறை கிடங்கு நிறுவனங்களின் சேவையில் ஈடுபடுவதை புது தில்லி கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக, ஆன்லைன் மார்க்கெட்டிங் அல்லது மின்னணு மண்டியைப் (electronic mandi) பயன்படுத்துவது மிகவும் உதவியாக இருக்கும்.

அதே நேரத்தில், விவசாய நடவடிக்கைகளை முழுமையாகவோ அல்லது குறைவாகவோ உறுதியுடன் மீண்டும் தொடங்குவது குறித்து தீவிர சிந்தனைக்கு உட்படுத்தவேண்டும். கோதுமை, கடுகு மற்றும் சாணா ஆகியவற்றின் பெரிய குறுவை பயிர்களின் அறுவடைகளை இனி காலம் தாழ்த்த முடியாது. பெரும்பாலான குறுவை பயிர்களின் விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்குக் கீழே உள்ளன.

துரித நிவாரணம்

லாக் டவுன் நேரத்தில் தேவைப்பட்டால் குறிப்பிட்ட நேரத்திற்கு விற்பனை கிடங்குகள் திறக்கலாம், விற்பனை அமைப்புகள், முறையான சமூக தூரத்தையும், கூட்டத்தைத் தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக, விரைவான நிவாரண நடவடிக்கையாக, மண்டி வரி அல்லது செஸ் குறைந்தது மூன்று மாதங்களுக்குத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

பல FPOகள் (உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்) மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஏற்றுமதி ஆணைகளை வைத்திருக்கின்றன, ஆனால் அவைகளை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. உறுதிப்படுத்தப்பட்ட ஏற்றுமதி ஆணைகளை வைத்திருப்பவர்கள் (ஏற்றுமதிக்கு முன்னர் வாங்கிய கடன் உட்பட) ஏற்றுமதி செய்ய முடியாத காரணத்தால் ஏற்பட்ட இழப்பிற்கு ஈடுசெய்யலாம்.

லாக் டவுன் நீடிப்பு அவசியமானால், விதை பொருட்களின் விற்பனைக்கு போதுமான கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட வேண்டும்,

இதேபோல், குறிப்பாக ஏற்றுமதி பொருட்களுக்காகத் துறைமுக நடவடிக்கைககள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட வேண்டும்,

இவை அனைத்திலும், மாநில அரசுகள் கிராமப்புற மக்களின் பிரச்சனைகளைத் தணிப்பதில் இந்நேரத்தில் உறுதியுடன் செயலாற்ற வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவச ரேஷன் மூலம் வழங்குவோம் என்ற வாக்குறுதியுடன் மற்றும் பாதிப்புக்கு உள்ளான வீட்டுக்கு 1 கிலோ பருப்பு போன்றவை தாமதமின்றி கொடுக்க வேண்டும். இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்/விவசாயத் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு வர உதவும் .

வேளாண்மை தொடர்பான நடவடிக்கைகளைப் புதுப்பிக்க மத்திய, மாநில அரசுகள் ஒற்றுமையாகச் செயல்படுவது மிகவும் முக்கியமானது. வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்கள் நாட்டுக்குச் சவாலாக இருக்கும். முடிந்தவரை மனிதநேயத்துடன் கஷ்டங்களைத் தணிப்பதும், சமூக அமைதிக்குப் பங்கம் ஏற்படாமல் இருக்க எந்தவொரு வாய்ப்பையும் கொடுக்காமல் இருப்பது இதன் நோக்கமாக இருக்க வேண்டும்.

எழுத்தாளர் கொள்கை வர்ணனையாளர் மற்றும் வேளாண் வணிக நிபுணர். கருத்துக்கள் தனிப்பட்டவை.

(The writer is a policy commentator and agribusiness specialist. Views are personal)

Translated by P Ravindran