கோவிட்-19 தொற்றுநோய்க்கிடையில், கிட்டத்தட்ட 80 சதவீத வேலை செய்யும் நபர்களுக்கு வருமானத்தில் இழப்பு ஏற்பட்டதாக சர்வே ஒன்று கூறுகிறது. அவர்களில் 92 சதவீதம் நபர்கள், பொருளாதார வீழ்ச்சியால் நிதியிழப்புகள் எதிர்காலத்தில் ஏற்படுமென்று கவலைப்படுகிறார்கள்.
உலகளாவிய காப்பீடு மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனமான ஜெனரலியின் சர்வேயில் இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளது.
நுகர்வோரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள 22 நாடுகளில், 12,958 அவர்களிடம் தற்போது உலகம் முழுக்க நிலவும் கோவிட் -19 நெருக்கடியின் காரணமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்தியாவில் காப்பீட்டுக்காக, ஃப்யூச்சர் குரூப்டன் (Future Group) கைகோர்த்துள்ள (JV) ஜெனரலி, 600க்கும் மேற்பட்ட நுகர்வோரோகளுடன் இந்த சர்வேவை நம்நாட்டில் மேற்கொண்டது.
சுயதொழில் செய்யும் வல்லுநர்கள் வரப்போகும் அடுத்த சில மாதங்களில் தங்கள் வருமானத்தில் பாதியை இழக்க நேரிடலாமென்று மதிப்பிடுகின்றனர், என இந்த சர்வே மேலும் கூறியுள்ளது.
நேசக் கரத்தை நோக்கி
இருப்பினும், பதிலளித்த 95 சதவீத இந்தியர்கள், வருமான இழப்பின் காரணமாக ஒருவித நிவாரணத்தை எதிர்பார்க்கிறார்கள். இழப்புகளை அனுபவித்தவர்களில் 53 சதவீதம் பேர் அரசாங்கம் உதவி செய்யுமென்று எதிர்பார்க்கிறார்கள்; சுமார் 60 சதவீதம் பேர் தங்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகளை நிலைமைகள் குறித்துத் தெரிந்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்; 39 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்தினர்கள் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், 40 சதவீத இந்தியர்கள் தங்கள் முதலாளிகள் ஏதேனும் ஒரு நிவாரணத்தைச் செய்வார்களென்று எதிர்பார்க்கிறார்கள், என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிக அளவில் வருமான இழப்பை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்கள் தங்கள் காப்பீட்டாளர்கள் கட்டண அட்டவணையில் சலுகைகள் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த முக்கியமான காலத்தில் நிதி உதவி அல்லது நிவாரணம் பெற 38 சதவீத மக்கள் தங்கள் காப்பீட்டு நிறுவனத்தை முன்கூட்டியே தொடர்பு கொண்டுள்ளனர் என்று அது கூறுகிறது. கோவிட் -19னால், மக்களிடம் காப்பீட்டு குறித்த ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஒரு முக்கிய மாற்றமாகும். சுமார் 73 சதவீத இந்தியர்கள் ஆயுள் காப்பீட்டை இந்த நெருக்கடியின் பதிலாகக் கருதுகின்றனர் மற்றும் வருமானத்தைப் பாதுகாப்பது குறித்து அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்று கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.
Translated by P Ravindran