ஸ்மார்ட்ஃபோன் வைத்திருந்தால் நமக்கு எப்போதும் ஒரு பெருமிதம், அதுவும் அந்த தொலைபேசியில் எண்ணற்ற செயலிகள் (apps) இருந்தால் மிக பெருமிதம். என்றைக்காவது உங்கள் தொலைபேசியில் உள்ள செயலிகள் எண்ணிக்கையை நீங்கள் எண்ணியுள்ளீர்களா? அவற்றில் எத்தனை உள்ளடிக்கிய (inbuilt) செயலிகள், எத்தனை பதிவிறக்கம் (download) செய்தது? செயலிகளைப் பதிவிறக்குவதற்கு முன்பு நீங்கள் எந்த வகையான 'அனுமதிகளை' வழங்கினீர்கள் என்பதைச் சரிபார்க்க எப்போதாவது கவலைப்பட்டீர்களா?

இல்லையென்றால் உடனே சோதனை செய்யவும், இல்லாவிடில் உங்கள் தொலைபேசி ‘ஸ்னீக்’ தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடும். அது என்ன 'ஸ்னீக்'? அதாவது நீங்கள் அறியாமல் பதிவிறக்கிய செயலிகள் பின்னால் மறைந்திருந்து ஹேக்கர்களால் உங்கள் தொலைப்பேசியை தாக்கக்கூடும். ஹேக்கர்கள் இதை புதிய யுக்தியாக தங்கள் தாக்குதல் முறையில் சேர்த்ததாகத் தெரிகிறது.

ஸ்மார்ட்ஃபோன் செயலிகளின் பின்னால் இருந்து வரும் தாக்குதல்கள் வேகமாக அதிகரித்து உள்ளன. 2020 ஆம் ஆண்டு மொபைல் ஸ்னீக் தாக்குதல்களின் ஆண்டாக இருக்கலாம், இதனை மக்கள் கண்டறிந்து சரி செய்வது மிகவும் கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2020 ஆம் ஆண்டிற்கான அச்சுறுத்தல் முன்னறிவிப்பு அறிக்கையில், இணைய பாதுகாப்பு தீர்வுகள் நிறுவனமான மெக்காஃபி (McAfee) கூறுகையில் மறைக்கப்பட்ட செயலிகள் (hidden apps) தொலைபேசிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும், இது 2019 ஆம் ஆண்டில் அனைத்து தீங்கிழைக்கும் செயல்களில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை உருவாக்குகிறது. இது முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகம்.

"மறைக்கப்பட்ட செயலிகள் சந்தேகத்திற்கு இடமின்றி நுகர்வோரை பல வழிகளில் பயன்படுத்துகின்றன, இதில் மூன்றாம் தரப்பு உள்நுழைவு சேவைகளைப் (third-party login services) பயன்படுத்தும் நுகர்வோரைப் பயன்படுத்திக் கொள்வது அல்லது தேவையற்ற விளம்பரங்களை வழங்குவது உட்பட," என்று மெக்காஃபி இந்தியாவின் பொறியியல் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குனருமான வெங்கட் கிருஷ்ணாபூர் கூறினார்.

மொபைல் சாதனங்கள் மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளதால் அவை பாதிக்கப்படக்கூடியவை. "மொபைல் சாதனங்கள் மற்றும் செயலிகளின் பாதுகாப்பு குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு குறைவாக உள்ளதால், சைபர் குற்றவாளிகள் இதை பயன்படுத்தி அவைகளை எளிதாக தாக்குகின்றனர்," என்று கிருஷ்ணாபூர் மேலும் கூறினார்.

"நுகர்வோர் அவர்கள் எங்கிருந்து செயலிகளை பதிவிறக்குகிறார்கள், அவர்கள் எதை கிளிக் செய்கிறார்கள் என்பதில் விழிப்புடன் இருப்பது மிகவும் கவனம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அவர்களின் டிஜிட்டல் வாழ்க்கையை பாதுகாப்பாக இருக்க, தங்கள் தொலைப்பேசியில் சரியான பாதுகாப்பு மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தினார்.

‘விளையாட்டு’ மோசடி

இதுபோன்ற மோசடிகள் பல ரூபத்தில் வருகின்றன. பிரபலமான விளையாட்டுகளின் மூலம் ஹேக்கர்கள் விரைவாக பணம் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர்.

"ஹேக்கர்கள் கேமர் அரட்டை செயலிகளில் (gamer chat apps) தீங்கிழைக்கும் செயலிகளைன் இணைப்புகளை பரப்புகின்றன. இந்த செயலிகள் உண்மையான செயலிகளின் படங்களை நெருக்கமாகப் பிரதிபலிக்கும் ஆனால் தேவையற்ற விளம்பரங்களை வழங்குவதும் மற்றும் பயன்ப்படுத்துவோரின் தகவல்களை மறைப்புறமாக சேகரிக்கும், ” என்றார் கிருஷ்ணாபூர்.

ஃபேஸ்ஆப் (Faceapp) மற்றும் ஸ்பாடிஃபை (Spotify) போன்ற அனைத்து பிரபலமான செயலிகளிலும் போலி பதிப்புகள் உள்ளன என்று மெக்காஃபி கூறியது.

எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்

ஒரு செயலியை பதிவிறக்குவதற்கு முன்பு அதன் டெவலப்பர் (app developer) மற்றும் அவர்களின் மூலாதாரத்தைப் (sources) பற்றி பயனர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று மெக்காஃபி அறிவுறுத்ததியது.

அந்த செயலிகள் பயன்ப்படுத்துவோரின் மதிப்புரைகளை (reviews) கவனமாகப் படிக்கவும்.

பயனர்கள் உபயோகிக்கும் எளிய சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் ஒரு செயலின் மதிப்புரைகளில் கண்டால், அந்த செயலி தீங்கிழைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இயக்க முறைமைகள் (operating system) மற்றும் செயலிகள் அடிக்கடி புதுப்பிக்கப்பட வேண்டும், இதனால் நமது தொலைபேசிகள் பாதுக்காப்பாக இருக்கும்.

(Translated by P Jaishankar)