குறைந்த கட்டண விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகியவைகள் மார்ச் 25 ஆம் தேதி தேதியிலிருந்து மே 3 ஆம் தேதி வரை செய்யப்பட்ட பயணத்திற்கான டிக்கெட்டுகளுக்கான பணத்தைப் பயணதரகு நிறுவனங்களுக்குத் திருப்பித் தரத் தொடங்கியுள்ளதாக நிஷாந்த் பிட்டி, (Nishant Pitti) தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான ஈசிமைட்ரிப்.காம் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது லாக் டவுன் மார்ச் 25 முதல் செயலில் இருக்கிறது. இது மே 3 வரை நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

"இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா இந்தியா போன்றவைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திருப்பித்தரத் தொடங்கியுள்ளன. மேலும் மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 3 வரை டிக்கெட் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் பணத்தைத் திருப்பித் தரத் தொடங்கியுள்ளோம் " என்று பிட்டி பிசினஸ்லைனிடம் கூறினார். பணத்தைத் திருப்பித்தருவது கடந்த செவ்வாய் முதல் தொடங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இண்டிகோ உள்நாட்டுச் சந்தையில் முதலிடத்தில் உள்ளது. இது 50 சதவீதத்திற்கும் குறைவான அளவில் உள்நாட்டுச் சந்தையில் பங்கைக் கொண்டுள்ளது.

புக்கிங் நடைமுறை

ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் புக்கிங் செய்யும் நடைமுறையை விளக்கிய பிட்டி, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோ ஏர் மற்றும் ஏர் ஏசியா போன்ற குறைந்த கட்டண விமானங்களுக்கு, ஈஸ் மைட்ரிப் போன்ற ஏஜென்சிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்கூட்டியே பணத்தை வாலாட் (wallet) என சொல்லப்படும் பணப்பையில் செலுத்த வேண்டும்.

"நாங்கள் எங்கள் பணப்பையில் இருக்கும் பணத்திற்கு ஈடாக டிக்கெட்டுகளை மட்டுமே விமான நிறுவனங்களுடன் பதிவு செய்ய முடியும் ... இது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விமான நிறுவனங்களுடன் நாம் வைத்திருக்க வேண்டிய ஒரு முன்பணம் போன்றது. முன்பணம் தீர்ந்துவிட்டால், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய மீண்டும் இருப்புகளில் பணத்தை நிரப்ப வேண்டும், ”என்றார்.

பணத்தைத் திருப்பி செலுத்த வேண்டியதை, ஏர்லைன்ஸ் மீண்டும் அப்பணப்பையில் செலுத்தும். இது மறுபடியும் புதிய டிக்கெட்டுகளை வாங்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். "வாடிக்கையாளர்களை பொறுத்தவரை, அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தைத் திருப்பித் தருகிறோம்," என்று பிட்டி கூறினார்.

இந்த காலகட்டத்தில் விமான நிறுவனங்கள் தங்கள் வலைத்தளங்களில் முன்பதிவு செய்த பயணச்சீட்டுகளுக்குத் திருப்பித் தருகிறதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இருப்பினும், விஸ்டாரா மற்றும் ஏர்இந்தியா போன்ற முழு சேவை விமானங்கள் வேறுபட்ட வணிக முறையைப் பின்பற்றுகின்றன. எனவே இந்த விமான நிறுவனங்கள் பணத்தை மீண்டும் பயணதரகர்கள் அல்லது ஆன்லைன் பயண முகவர்களுக்கு மாற்றுவது குறித்த கேள்வி எழுப்பப்படவில்லை என்று இந்த தொழில் சேர்ந்த பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பயண முன்பதிவு மற்றும் விமானங்கள் இயங்குவது குறித்து பிரச்சினைகள் முன்னோக்கி வரக் காரணம், ஆரம்பத்தில் ஏப்ரல் 14 நள்ளிரவு வரை அகில இந்திய லாக் டவுன் செயல்படுத்த அரசாங்கம் முடிவு எடுத்தது.

சில உள்நாட்டு விமான நிறுவனங்கள் ஏப்ரல் 15க்கு பிறகு முன்பதிவு செய்யத் தொடங்கின. உடனடியாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மே 4 ஆம் தேதி வரை எந்த முன்பதிவுகளையும் எடுக்க வேண்டாமென்றும், ஏப்ரல் 15க்கு பிறகு டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளின் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தியது. அகில இந்திய லாக் டவுன் மே 3 நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டதால் மே 4 வரை எந்த முன்பதிவும் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளது

ஏப்ரல் 18 அன்று ஹர்டீப் பூரி (Hardeep Puri,) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் தன்னுடைய டிவிட்டரில், விமான நிறுவனங்கள் அரசு முடிவெடுக்கும் வரை எந்த முன்பதிவும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். தனியார் விமான நிறுவனங்கள், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) சுற்றறிக்கை வரும் வரையில் முன்பதிவு செய்வதை நிறுத்தவில்லை.

Translated by P Ravindran