கொரோனா வைரஸ் (nCov)தாக்கத்தை மேற்கோள் காட்டி உலக மொபைல் காங்கிரஸ்2020-லிருந்து ஸ்பான்சர்கள் மற்றும் கண்காட்சியாளர்கள் விலகிய நிலையில்,ஜிஎஸ்எம் அசோசியேஷன் (GSM Association - GSMA) இந்த ஆண்டின் நிகழ்வை ரத்து செய்துள்ளது.

 

இந்த நிகழ்வு பிப்ரவரி 24-27 வரை ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற இருந்தது.

 

“பார்சிலோனாவிலும்,ஸ்பெயின் நாட்டிலும் கொரோனா வைரஸ்பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், இது குறித்த உலகளாவிய அக்கறைகாரணமாகவும், ஜி.எஸ்.எம்.ஏ நிகழ்வை நடத்துவது சாத்தியமில்லை,” என ஜிஎஸ்எம்ஏ தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஹாஃப்மேன் ஒரு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்தார்.

 

MWC பார்சிலோனா2021

 

ஜி.எஸ்.எம்.ஏ மற்றும் பார்சிலோனா நகரமும் தொடர்ந்து ஒற்றுமையாக செயல்படுவதோடு,எம்.டபிள்யூ.சி பார்சிலோனா2021 மற்றும் எதிர்கால பதிப்புகளுக்காக ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பார்கள்எனவும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது.

 

2006 இல் பார்சிலோனாவில்MWC-இன் முதல் பதிப்பிலிருந்து, ஜிஎஸ்எம்ஏ, தொழில்,அரசாங்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள்,ஆபரேட்டர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை ஒன்றிணைத்துள்ளது எனவும் குறிப்பிட்டிருந்த்து.

 

நிறுவனங்கள் விலகல்

 

ஜப்பானின் சோனி கார்ப்,கிராபிக்ஸ் நிறுவனமான என்விடியா கார்ப்,ஸ்வீடனின் தொலைத் தொடர்புஉபகரணங்கள் தயாரிப்பாளர் எரிக்சன்,தென் கொரியாவின் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்,மென்பொருள் வழங்குனர் அம்டாக்ஸ்,ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் ஜப்பானின் என்.டி.டி டொகோமோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த நிகழ்விலிருந்து விலகியிருந்தன. இந்த நிகழ்வின் மிகப்பெரியஸ்பான்சர்களில் என்விடியாவும் ஒன்றாகும்.

 

இந்தியக்குழு

 

ஒவ்வொரு ஆண்டும், 3,000-4,000இந்தியர்கள் - தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகள்,தொழில் வல்லுநர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டபலர் - இந்த நிகழ்ச்சிக்காக பார்சிலோனாவுக்கு பயணம் செய்கிறார்கள்.

 

உலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு வர்த்தக நிகழ்வான எம்.டபிள்யூ.சியின்(MWC) அமைப்பாளர்களான ஜி.எஸ்.எம்.ஏ, (GSMA)இந்த ஆண்டு பார்சிலோனாவில்கொரொனாவைரஸ் பாதிப்பை தொடர்ந்துகை குலுக்கும் மரபையும் தவிர்க்கநடவடிக்கைகளை எடுத்தது.

 

பிப்ரவரி 9ம் தேதி,ஜிஎஸ்எம்ஏ (GSMA) ஒரு அறிக்கையில்,பொது பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியது. கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக,சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்துவரும்பார்வையாளர்களுக்கும் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Translated by Srikrishnan PC