கொரோனாவுக்கு மலேரியா தடுப்பு மருந்து - மருத்துவர்கள் எச்சரிக்கை

Radhika SR Updated - March 26, 2020 at 03:53 PM.

கொரோனா சிகிச்சைக்கு மலேரியா தடுப்பு மருந்தினை மருத்துவர்பரிந்துரையின்றி கண்மூடித்தனமாக பயன்படுத்தக் கூடாது எனஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) எச்சரித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு, மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் பலனளிப்பதாக

செய்திகள் வெளியாகின. இதையடுத்து மருந்தகங்களில் அந்த மருந்தினை வாங்க ஏராளமானோர் லைமோதியுள்ளனர்.

மருத்துவர் பரிந்துரையின்றி கண்மூடித்தனமாக அந்த மருந்தினை பயன்படுத்த கூடாது என்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர், பாதிப்புக்குள்ளாகி தொடர்ந்து கண்காணிப்பிலுள்ள குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் அதனை பயன்படுத்துவதாகவும், அதனை அனைவராலும் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

 

மருத்துவர் பரிந்துரையின்றி இன்றி தன்னிச்சையாக மருந்துகளை கையாள்வது நிச்சயம் ஆபத்தில் முடியலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.

Published on March 26, 2020 02:42