கொரோனா வைரஸால் வீட்டீல் முடங்கியுள்ள மக்களுக்கு, வானோலி ஒரு சுக ராகமாக அமைந்துள்ளது.

ஒருபுறம் ரேடியோ கேட்போரின் அதிகரிப்பு, வானொலி ஒலிபரப்புத் துறையின் காதுகளுக்கு மகிழ்ச்சியான ஒலியாக இருந்தாலும், அதிக இயக்க செலவினங்கள், விளம்பர வருவாயில் சரிவு மற்றும் பிற ஊடகங்களிடமிருந்து கடுமையான போட்டி பெரிய சவாலாக உள்ளது. இந்த உயர்வு தற்காலிகமானது, மேலும், அரசாங்கத்தின் கொள்கையில் ஆதரவு நிலை எடுத்தால் மட்டுமே 'மகிழ்ச்சி ஒலி' நீடிக்கும் என்று தொழில்துறை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர்.

தொலைக்காட்சி முதலிடம்

AZ Research PPL இன் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில், லாக்டவுன் போது வானொலியில் தினம் செலவழிக்கும் சராசரி நேரம் 23 சதவீதம் (அல்லது 30 நிமிடங்கள்) உயர்ந்து 2.36 மணி நேரமாகியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. முதலிடத்தில் தொலைக்காட்சி உள்ளது, தொலைக்காட்சியில், ஒரு நாளைக்கு 25 சதவீதம் (அல்லது 40 நிமிடங்கள்) சுமார் 3.30 மணி நேரம் மக்கள் செலவிடுகின்றனர்.

இந்த ஆய்வு , இந்திய வானொலி ஆபரேட்டர்கள் சங்கம் (AORI) டெல்லி, கொல்கத்தா, மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு முழுவதும் 3,300 நேர்காணல்களின் (மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 வரை‌ நடத்தப்பட்ட ஆய்வு) மூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் சிறப்பு அம்சம் என்னவென்றால், வானொலி கேட்போர் எண்ணிக்கை 51 மில்லியனைத் தொட்டுள்ளது என தெரியவந்துள்ளது, இது தொலைக்காட்சி (56 மில்லியன்) மற்றும் சமூக ஊடகங்களை (57 மில்லியன்) நெருங்க ஆரம்பித்துள்ளது.

"எங்கள் அனுபவத்தில், வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் பொழுது, கேட்போர் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என்று நிச்சயமாகக் கூறலாம்" என்று சிஓஓ மற்றும் ரெட் எஃப்எம் மற்றும் மேஜிக் எஃப்எம் இயக்குநர் நிஷா நாராயணன் கூறியுள்ளார். "இந்த தொழில் குறிப்பிட்ட இடத்திலிருந்து இயங்கினாலும், கேட்பவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மேலும், ஏராளமான தகவல்களும் எங்களுக்கு வந்து கொண்டியிருக்கும், இதை பார்ப்பதிற்கு உற்சாகமாக இருக்கும் என்று" அவர் மேலும் கூறினார்.

சன் குழுமத்தின் ஒரு பகுதியான RED FM நெட்வொர்க், இந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற பல்வேறு மொழிகளில் 69 நிலையங்களிலிருந்து நாட்டின் 64 நகரங்களிலிருந்து ஒலிபரப்பப்படுகிறது.

இந்த ஆய்வு, 82 சதவிகித மக்கள் இந்த லாக்டவுன் காலத்தில் வானொலியைக் கேட்பதாகவும், தொலைக்காட்சிக்குப் பிறகு, எஃப்எம் சேனல்கள் வெகுஜனங்களுக்கு நம்பகமான தகவல்கள் தருவதில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக மேலும் தெரிவிக்கிறது.

'பொறுப்பான ஊடகம்'

"வானொலி ஒரு பொறுப்பான ஊடகமாக இருப்பதைக் கவனத்துடன் பார்த்துக் கொள்கிறோம். போலி செய்திகள் மற்றும் சரிபார்க்கப்படாத நடுப்புகள் மற்றும் மக்களை அமைதிப்படுத்த நாங்கள் பெரும் பங்களிப்பு செய்கிறோம், ” என்று பிக் எஃப்எம்மை இயககும் ரிலையன்ஸ் பிராட்காஸ்ட் நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆபிரகாம் தாமஸ் கூறினார். மேலும், எஃப்.எம் ஒலிபரப்பாளர்கள், கேட்பவர்களின் ஈடுபாட்டை அதிக அர்த்தமுள்ள பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்திக் கொள்கிறோம். உதாரணமாக, பிக் எஃப்.எம்மில் உள்ள ஆ.ஜேக்கள் தங்கள் வீடுகளின் பின்னணி இரைச்சலுடன் தணிக்கை செய்யாமல் நேரடி ஒலிபரப்பைச் செய்கிறார்கள். இது ஆர்.ஜே.க்களுக்கும், கேட்போருக்கும் வீட்டில் வேலை செய்யும் உண்மையான உணர்வைத் தருவது மட்டுமல்லாமல், வீட்டிலேயே இருக்க வேண்டியதன் அவசியத்தையும் காட்டுகிறது .

"மேலும், நாங்கள் சுகாதார பயன்பாடு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட செய்திகளில் புதிய தகவல்களை இணைப்பதில் எங்கள் நெட்வொர்க் மூலம் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மட்டுமே வழங்க அனுமதிக்கிறோம்" என்று தாமஸ் கூறினார்.

அரசாங்க விளம்பரம்

ஆனால்

, இந்த வாடிக்கையாளர்கள் உயர்வு தற்காலிகமானது. தொழில் தொடர்ந்து தாக்குப்பிடிக்கப் பெரிய அளவில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது .அரசாங்கம், தனது விளம்பரத்தை 80 சதவிகிதம் குறைத்து, தொழில்துறையைத் தடுமாற்றத்தில் தவிக்கவிட்டுள்ளது. இந்த தொழிலுக்கு , விளம்பர மற்றும் விஷுவல் பப்ளிசிட்டி இயக்குநரகம் (டிஏவிபி) பெரும் தொகையை நிலுவை வைத்துள்ளது. அவற்றில், பல நிலுவைகள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளன.

ஒலிபரப்பாளர்கள், அரசாங்கத்திற்கும், பிரசார பாரதியுக்கும் உரிமக் கட்டணமாக ஒரு பெரிய தொகையைச் செலுத்த வேண்டும். "கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தொழில் சற்று மந்தமானன நிலையில் உள்ளது. தொழில்துறையில் உள்ள முக்கியமான நபர்கள், நடப்பு நிதியாண்டில் 20 சதவீதம் வரை வீழ்ச்சி இருக்கும் என்கின்றனர். தவிர, அரசாங்கம் தனது செலவுகளைப் பெரிய அளவில் குறைத்துள்ளதால், இது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது ”என்று பிக் எஃப்எம் தாமஸ் கூறினார்.

கடந்த மாதம், எஃப்.எம் ஒலிபரப்பாளர்களின் சங்கமான AROI தொழில் மீட்டெடுப்பதற்கு அரசுக்குக் கடிதம் எழுதியது. மூன்று விதமான தொகுப்புகளின்படி, உரிமக் கட்டணம் செலுத்துவதில் ஒரு வருட விலக்கு, அரசாங்க விளம்பரங்கள் மறுபடியும் வானொலிக்கு வழங்குவது மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் தொகைகளை வழங்குமாறு DAVPய கேட்டுக் கொள்ளுதல், ஆகியவற்றை வலியுறுத்திியுள்ளது.

“நாங்கள் வானொலியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்கிறோம். இதுபோன்ற காலங்களில்தான், வானொலி, செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் மற்றும் சரியான தகவல்களை வழங்கும், ஏனெனில், மக்கள் தொகையில் இது 82 சதவீத அளவில், அதுவும் ஏழைகளிலும் ஏழைகளான மக்களைச் சென்றடைகிறது,” என்று நாராயணன் மேலும் கூறினார்.

Translated by P Ravindran