பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியமான $5 லட்சம் கோடி பொருளாதார இலக்கை நோக்கி, இந்திய அரசாங்கம் அந்தப் பாதையில் பயணிக்கிறது. ஆனால் கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக, இந்த இலக்கை அடைவது தாமதமாகலாம் என்று முன்னாள் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் மற்றும் ஜி 20இல் இந்தியாவின் தூதுவராக இருக்கும் சுரேஷ் பிரபு கூறினார்.

மாவட்ட அளவிலான வளர்ச்சி அதன் இயல்பை விடக் குறைந்தது 3 சதவிகிதம் உயர்ந்தால் நாடு பொருளாதார வளர்ச்சிக்குத் திரும்பும். கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராட உலகெங்கிலுமுள்ள நாடுகள் பெரும் நிதி தொகுப்புகளை அறிவித்துள்ளன. இந்த முதலீடுகளை இந்தியா ஈர்க்க வேண்டுமென்றால் நாம் அவர்களுக்குச் சிறந்த சலுகைகளையும், வணிகம் செய்வதை எளிதாக்கவேண்டுமென்று அவர் கூறினார்.

தெலுங்கானா வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (எஃப்.டி.சி.சி.ஐ) ஏற்பாடு செய்துள்ள ' பொருளாதாரத்தில் கோவிட்-19 தாக்கம்' குறித்து இணையக் கருத்தரங்கில் (Webinar) உரையாற்றிய சுரேஷ் பிரபு, வளர்ச்சி மீண்டும் வரும். அரசாங்கம் மிகவும் நம்பிக்கையாக உள்ளது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 86 சதவீத பங்கைக் கொண்ட ஜி 20 ஒரு பகுதியாக இந்தியா உள்ளது.

ஜி7 அழைப்பு - அங்கீகாரம்

அமெரிக்க

அதிபர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜி 7-ல் இணைத்துக் கொள்ளுமாறு சமீபத்தில் அழைப்பு விடுத்தது, ஒரு முக்கிய நிகழ்வாகும். சுமார் 10-11 உறுப்பினர்கள் கொண்ட ஜி7-ஐ விரிவாக்க விரும்புகிறார். இது நமது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். இந்தியா $5 லட்சம் கோடி பொருளாதாரத்தை அடைவதற்கான விரிவான, நன்கு திட்டமிடப்பட்ட திட்டத்தை அரசு கொண்டுள்ளது. ஆனால் கோவிட்-19 காரணமாக, அதை அடைவதில் சிறிது கால தாமதம் ஏற்படக்கூடுமென்று சுரேஷ் பிரபு மேலும் கூறினார். தெலுங்கானா சுறுசுறுப்பு

இந்த கோவிட்-19 நேரங்களில் தொழில்களுக்கு உதவி வழங்குவதில் தெலுங்கானா அரசு சுறுசுறுப்பாகவும், செயலூக்கமாகவும் இருக்கிறது, என்று ஜெயெஷ் ரஞ்சன், முதன்மை செயலாளர், (தொழில் மற்றும் வணிகம்), தெலுங்கானா, கூறியுள்ளார்.

பொருளாதாரத்தைச் வளர்ச்சியடைய செய்வதற்கான முயற்சிகளை மாநில அரசாங்கம் எளிதாக்குகிறது. மேலும், அனைவரும் பாதுகாப்பாக இருக்க உறுதி செய்கிறது. மாநிலத்தை ஒரு கவரத்தக்க முதலீட்டு இடமாக மாற்ற நினைக்கிறது," என்று அவர் கூறியுள்ளார்

தெலுங்கானா, முக்கியமாக வணிகம் செய்வதை எளிதாக்குவதை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்களைத் தொடங்கும். முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சீனாவைப் போலவே அரசு தன்னிறைவான வணிக நகரங்களை உருவாக்குகிறது. சுமார் 20,000 ஏக்கரில் வரும் மருந்து ஆக்கத்தொழில் நகரம் (Pharma City) அவற்றில் ஒன்று என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார மற்றும் சமூக ஆய்வுகள் மையத்தின் (CESS) முன்னாள் இயக்குநர் எஸ்.மகேந்திர கூறுகையில், கோவிட்-19 முடியும் பொழுது, இந்தியா வரும் காலத்தில் முதல் 2-3 நாடுகளில் பிரகாசமான எதிர்காலத்துடன் இருக்கும். தொழிலாளர்களில் சுமார் 6 கோடி எம்..எஸ்.இ நிறுவனங்களில் 91 சதவீதம் பணி புரிகிறார்கள். அவற்றுள் 90 சதவீத நிறுவனங்கள் முறைசாரா துறையில் இயங்குகிறது.

Translated by P Ravindran