ஆண்டனி வேஸ்ட் ஹேண்ட்லிங் செல் (Antony Waste Handling Cell) ஐபிஓ (IPO) இன்று (மார்ச் 4) தொடக்கம். இந்த பங்குகள் வரும் 6ம் தேதியான வெள்ளிகிழமை வரை விற்பனை செய்யப்படும்.
ஆண்டனி வேஸ்ட் ரூ 5 முகமதிப்புடன் ரூ 295-300க்கு பங்குகளை விற்பனை செய்கிறது. இதன் மூலம் ரூ 206 கோடிகளை திறட்ட திட்டமிட்டுள்ளது. புதிய பங்குகள் விற்பனை மூலம் 35 கோடி ரூபாயும்,
ஆபர் பார் சேல் (OFS ) அடிப்படையில் தற்போதைய முதலீட்டாளர்கள் மீதமுள்ள சுமார் ரூ 170 கோடியை, அதாவது 57 லட்சம் பங்குகளை விற்று நிதி திறட்ட முடிவு செய்துள்ளனர்.
இந்த ரூ 175 கோடிகள், தற்போதைய முதலீட்டாளர்களான Leeds (Mauritius), Tonbridge (Mauritius), Cambridge (Mauritius) மற்றும் Guildford (Mauritius) அவர்களுக்கு செல்லும்.
ஆண்டனி வேஸ்ட் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வியாபாரம் செய்யப்படும்.
இந்த ஐபிஓ வில் விண்ணப்பிக்க விரும்பவர்கள் குறைந்தபட்சம் 50 (market lot 50) பங்குகளையாவது வாங்க வேண்டும்.
ஆண்டனி வேஸ்ட்: ஒரு பார்வை
ஆண்டனி வேஸ்ட் ஹேண்ட்லிங் செல் (Antony Waste Handling Cell) ஒரு திடக்கழிவு மேலாண்மையை கையாளும் கம்பெனி ஆகும். இந்த கம்பெனி இந்தியாவிலுள்ள பல முனிசிபல் கார்ப்பரேஷன்களுடன் தொடர்புகொண்டு திடக்கழிவு மேலாண்மையை செய்துவருகிறது. திடக்கழிவுகளை கொணர்தல், இடம்பெயர்தல், கையாளுதல் மற்றும் துப்புரவு செய்தல் என திடக்கழிவுக்கு உரித்தான அனைத்து வேலைகளையும் (end-to-end) இந்த கம்பெனி செய்கிறது. மேலும் இதற்காக இந்த கம்பெனி இந்தியாவில் உள்ள பல முனிசிபல் கார்ப்பரேஷன்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றுள் சில முக்கியமான கார்ப்பரேஷன்கள் கிரேட்டர் மும்பை கார்ப்பரேஷன், நவி மும்பை கார்ப்பரேஷன், தானே முனிசிபல் கார்ப்பரேஷன், பிம்ப்ரி-சிஞ்ச்வாட் கார்ப்பரேஷன், நார்த் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன், மங்களூரு முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் பல.
தற்போது இந்த கம்பெனி 17 ப்ராஜெக்ட்களை தன்வசம் வைத்துள்ளது.
நிதியின் பயன்பாடு
இந்த ஐபிஓவின் மூலம் திறட்டும் நிதியைக் கொண்டு, தன்னுடைய மொத்த கடன்சுமையை குறைக்கப் பார்க்கிறது. தன்னுடைய துணை கம்பெனியான ஏஜி என்விரோ இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸில் (AG Enviro Infra Projects) முதலீடு செய்து அதனுடைய கடன் சுமையைக் குறைக்க உதவும். இதைத்தவிர கம்பெனியின் பொது செலவினங்களுக்கும் (general corporate purpose), இந்த தொகையிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக்கொள்ளும்.