இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (சுருக்கமாக ஐ.ஆர்.சி.டி.சி ) பங்குகள் பங்கு சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் வர்த்தகத்துக்கு வந்தது முதல், முதலீட்டார்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்து கொண்டு இருக்கிறது. இந்த கம்பெனியின் ஐபிஓவில் (IPO) ரூ 320-ல் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களுடைய முதலீடு 5 மடங்காக உயர்ந்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.ச பங்குகள் தினம்தோறும் புதிய உச்சத்தை எட்டிக்கொண்டே இருக்கிறது. வியாழனன்றுக்கூட, ஐ ஆ ர் சி டீ சி பங்குகள், ரூ 1,609.30-ல் புதிய உச்சத்தை அடைந்தது.
டிசம்பர் மாத காலாண்டில் அதனுடைய லாபம் மூன்று மடங்கு அதிகரித்ததால் பங்குசந்தையில் ஐ ஆர் சி டி சி உச்சத்தை அடைந்தது.
அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்த பொதுத்துறை நிறுவனம் தனது நிகர லாபத்தை மூன்று மடங்காக கூட்டி ரூபாய் 205.80 கோடிகளை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதேக் காலகட்டத்தில் இந்த நிறுவனம் ரூ 73.59 கோடிகள் லாபம் ஈட்டியிருந்தது. மொத்த வருவாயும் 65 சதவிகிதம் உயர்ந்து ரூ 715.98 கோடிகளை (ரூ 435 கோடிகள்) எட்டியுள்ளது.
அமோகமான ஐபிஓ
ஐ.ஆர்.சி.டி. சி நிறுவனம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியன்று ஐபிஓ ((IPO) வெளியிட்டது. அப்போதே அதற்கு எல்லாத் தரப்பு மக்களிடமிருந்து பெரிய ஆதரவு கிடைத்திருந்தது. விற்பனைக்கு வந்த பங்குகளை விட அதை வாங்குவதற்கு 112 மடங்கு போட்டியிருந்தது. பெரும் முதலீட்டாளர்கள், ஃபாரின் போர்ட்ஃபோலியோ இன்வெஸ்டர்ஸ் (foreign portfolio investors), சிறு மற்றும் குறு முதலீட்டாளர்கள் (retail investors and high net worth individuals) மற்றும் கம்பெனியின் ஊழியர்கள் என அனைத்து தரப்பு முதலீட்டாளர்களிடமிருந்து இந்த கம்பெனியின் ஐபிஓவுக்கு (IPO) அமோக ஆதரவு கிடைத்தது.
வேகத்தடை காணுமா?
இப்பங்குகள் தினம் உயர்ந்து வருவதை கண்டு பங்குச் சந்தை நிபுணர்கள் சற்று ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஐ.ஆர்.சி.டி. சி ஒரு உயர்தர மற்றும் வலுவான கம்பெனி என்பதில் அவர்களுக்கு எந்த சந்தேகமுமில்லை. ஆனால் இந்த கம்பெனியின் சரியான விலையை கணிக்க நிபுணர்களுக்குச் சற்று சிரமமாக உள்ளது. ஏனெனில் ஐ.ஆர்.சி.டி. சி ஒரு தனித்துவம் வாய்ந்த கம்பெனியாகும். இதை மற்ற கம்பெனிகளுடன் ஒப்பீடு செய்து இதன் விலையை நிர்ணயம் செய்வதற்கு பங்குச்சந்தை ஆலோசகர்களுக்கு சற்றுக் கடினமாக உள்ளது.
இந்த கம்பெனி நான்கு துறைகளில் வியாபாரம் செய்து வருகிறது இன்டர்நெட் டிக்கெட்டிங் (internet ticketing), ரயில் நீர் (rail neer), கேட்டரிங் (catering) மற்றும் டூரிசம் அண்ட் ட்ராவல் (tourism and travel). இந்த நான்கு துறைகளிலும் இந்த கம்பெனியின் லாபம் மற்றும் வருவாய்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஐ.ஆர்.சி.டி. சி-யின் சாதக புள்ளிகள்
1) பொது நிறுவனம் என்பதால், கம்பெனியின் மேல் ஒரு நம்பகத்தன்மை யுள்ளது. இதைத்தவிர நிதி நிலைமையும் சீராகவும் மற்றும் வளர்ச்சிப்பாதையில் செல்வதாகவும் உள்ளது.
இது ஒரு தனித்தன்மை வாய்ந்த கம்பெனியானதால், இதற்கு போட்டியாளர்கள் இல்லை. இதற்கென்று உள்ள சந்தையை பகிர்ந்து கொள்ள யாருமில்லாததால் இதனுடைய நிதிநிலைமை வேகமாக வளர்ச்சியடைய எந்த தடையும் இல்லை.
2) தேஜாஸ் என்றழைக்கப்படும் மிக நவீனமயமான ரயில்களை ஐ.ஆர்.சி.டி. சி மேலும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும். இதனால் கம்பெனியின் லாபம் அதிகரிக்கும். மேலும், Competition Commission of India என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் போட்டியை ஊக்குவிக்கும் இந்தியத்துறை நிறுவனமும் ஐ.ஆர்.சி.டி. சியின் தேஜாஸ் ரயில்களுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
3) மேலும், AMFI என்கிற மியூச்சுவல் ஃபண்டுகளின் ஒருங்கிணைந்த குழு செபியின் ஆணைப்படி ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் எந்தெந்த பங்குகள் மிட்கேப் (midcap) மற்றும் ஸ்மால்கேப் (smallcap) என்ற வரையறைக்குள் வரவேண்டும் என்ற பட்டியலை வெளியிட வேண்டும். ஐ.ஆர்.சி.டி. சி பங்குகள் இந்த பட்டியலில் கண்டிப்பாக இடம்பெறும். அதனால் மியூச்சுவல் ஃபண்டுகள் (mutual funds) இதன் பங்குகளை கண்டிப்பாக வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு வருவார்கள்.
இன்னும் வேகம் பிடிக்குமா?
Prabhudas Liladhar என்னும் பங்குசந்தை தரகு மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனம் இதன் பங்குகளை வாங்கலாம் என்று கூறியுள்ளது. அது நான்கு துறைகளையும் தனித்தனியாக பகுத்தாய்ந்து இந்தக் கம்பெனியின் பங்குகள் ரூ 1,390 வரை செல்லும் என கூறியுள்ளது. ஆனால் ஐஆர்சிடிசி பங்குகள் தற்போது அதைவிட 15 சதவீதம் உயரத்தில் விற்பனை ஆகிக்கொண்டு இருக்கிறது.
ஆகவே இந்த பங்குகள் இதே மாதிரி வேகம் பிடிக்குமா என்பது சற்று கடினமே. ஆனாலும் நீண்டகாலம் முதலீடு (இன்வெஸ்ட் - invest) செய்ய விரும்புகிறவர்கள் இந்த பங்கை பகுதி-பகுதியாக வாங்கலாம் என்று சந்தை நிபுணர்கள் அறிவுரை வழங்குகிறார்கள்.
Comments
Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.
We have migrated to a new commenting platform. If you are already a registered user of TheHindu Businessline and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.