நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், இந்தியாவின் பிரதான பங்கு சந்தைகளான மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் சிறிதும் சலசலபபின்றி வர்த்தகத்தை இயல்பாக செய்து கொண்டு வருகின்றன.
பிஎஸ்இ தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சவுகான், மலபார் ஹில்ஸில் உள்ள தனது இல்லத்திலிருந்து அதிகாலையிலே துறைமுகம் அருகில் உள்ள தனது அலுவலகத்தை அடைந்து, ஊரடங்கிற்க்கு மத்தியில் நடவடிக்கைகள் சீராக இயங்குவதை உறுதி செய்கிறார்.
இதேபோல், என்எஸ்இ தலைவர் விக்ரம் லிமாயே, தாதரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து பி.கே. சி.யில் (BKC) உள்ள தலைமையகத்திற்கு தினமும் அதிகாலை விரைகிறார்.
இந்தியாவின் இரண்டு பெரிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாகிகள், நாடு தழுவிய -கோவிட் 19 லாக் டவுன் பிறகு பங்குச் சந்தைகளைத் திறந்து வைப்பதற்காக 'அனைத்து உத்திகளையும் கையாண்டு' உரிய நேரத்தில் பங்கு வர்த்தகம் இயங்குமாறு செய்கின்றனர்.
இரு சந்தையை சேர்ந்த பொறியாளர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழு சூரிய உதயத்திற்கு முன்னர் அந்தந்த அலுவலகங்களை அடைந்து சேவையைத் தொடங்குகின்றனர், இப்பணியில் தொடர்புடைய நபர் ஒருவர் பிசினஸ்லைனிடம் தெரிவித்தார்.
தொழில்நுட்ப குழு அருகில் மேலும், தொழில்நுட்பக்குழுவை (கம்ப்யூட்டர் பொறியாளர்கள், இன்டர்நெட் சேவை நிபுணர்கள், தகவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள்) சேர்ந்தவர்களை, ஃபோர்ட் (Fort) மற்றும் அதைச் சுற்றியுள்ள பரிமாற்ற அலுவலகத்திற்கு அருகில் தங்க வைத்திருக்கிறது.
அதேப்போல் NSE-யும் முக்கிய பணியாளர்களை அலுவலகம் அருகே வைத்துள்ளது. இதைத்தவிர மும்பையில் உள்ள மற்ற பணியாளர்களை அழைத்து வர சிறப்புப் போக்குவரத்து சேவைகளையும் செய்கிறது, என்று என்எஸ்யின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டுச் சந்தைகளும் உயர் மட்ட பேரிடர் மீட்பு, மற்றும் வணிகத் தொடர் திட்டம், ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளனர், என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவை வெள்ளம், கனமழை, போர், பூகம்பம் அல்லது வகுப்புவாத கலவரம் போன்ற நெருக்கடிக் காலங்களில் கூட சந்தைகளை இயங்க வைக்கும். நெருக்கடியான நேரத்தில் சந்தை தொடர்பான சேவைகளுக்கு, ஊழியர்களுக்கான இடத்திலுள்ள அலுவலகங்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது இவை உதவுகின்றன.
சில பி.எஸ்.இ அதிகாரிகள் அருகிலுள்ள ஹோட்டலில் தங்க தங்க வைக்கபட்டுஉள்ளனர்.
புதன்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி கோவிட் -19 பரவலைத் தடுக்க நாடு தழுவிய லாக் டவுன் அறிவித்தார். பேரிடர் மேலாண்மை சட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.
பங்குச் சந்தைகள் வர்த்தகம் தொடரும்
மத்திய அரசு பங்குச் சந்தைகள் திறந்த நிலையில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. பொது போக்குவரத்து சேவை பாதிப்பு இருந்த போதிலும் தரகர்கள் மற்றும் அதன் துணைத் தொழிலாளர்கள் மும்பையில் கோடிக்கணக்கில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் வேலைக்காக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
.அவசியம் இல்லாத ஊழியர்கள் வீட்டிலிருந்து வி.பி.என் ( தனியார் ) வழியாக வேலை செய்ய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஃபோர்ட்ல் உள்ள ஒரு முக்கிய அலுவலகம் தவிர, BSE, நவிமும்பையிலும் மற்றொரு disaster recovery என்று அழைக்கப்படும் டி ஆர் அலுவலகம், ஹைதராபாத்தில் உள்ளது, இது மும்பை சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகும் பொழுது, இவை சேவைகள் செய்ய ஆரம்பிக்கும். என்எஸ்யிம் இதேபோல் தனது டிஆர் மையத்தை சென்னையில் கொண்டுள்ளது. இந்த இடங்களின் இணைப்பு விநாடி அடிப்படையிலான இணைப்பு உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பங்குத் தரகர்களுக்கு சேவை
தானே
முதல் ஃபோர்ட் வரை பங்குத்தரகர்கள் மற்றும் பங்குச் சந்தை ஊழியர்களுக்காகக் காலை மற்றும் மாலை பேருந்து சேவைகளை வழங்க பெஸ்ட் மற்றும் பிஎஸ்இயும் இணைந்து செயல்படுகின்றன. என்எஸ்இயும் அத்தகைய சேவைகளைச் செய்கிறது. பிஎஸ்இ தனது ஊழியர்கள் மூன்று ஷிப்ட்களாக பிரித்து உள்ளது. என்எஸ்இ-யில் 25-30 சதவீத ஊழியர்கள் தான் பணிபுரிகின்றனர். தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, தகவல் ஏற்றம், இணக்கம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் ஆகியோர் மட்டுமே பணி செய்கிறார்கள். மற்றவர்கள் வி.பி.என் வழியாக இணைக்கப்பட்டுள்ளனர், என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
பணியாளர்களுக்கு சுகாதாரம்
தற்போது, அலுவலகங்களிலும் அனைத்து பார்வையாளர்களின் நுழைவு தடைசெய்யப்பட்டுள்ளது. மற்றும் பணியாளர்கள் உள்ளே நுழையும் போது சுத்தப்படுத்தப்படுகிறார்கள்.
பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இரண்டும் தங்கள் அலுவலகங்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தியுள்ளன. மேலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வரை அடுத்த சில வாரங்களுக்கு இது தொடரும் என்று நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தனர்.
மும்பையில் 40 கி.மீ இடைவெளியில் உள்ள தனது இரண்டு அலுவலகங்களில் சுமார் 20 முதல் 30 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மற்ற இரண்டு ஷிப்ட்களில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஐ.டி ஊழியர்கள், மற்ற ஊழியர்கள் வெவ்வேறு அலுவலகங்களிலும், வீட்டிலும் தொடர்ந்து காணொளி மூலம் தொடர்பில் உள்ளனர். பிஎஸ்யின் பிரதான கட்டிடத்தில் 20 பேர் ஏறும் திறன் கொண்ட லிப்ட்ல் 6 பேருக்கு மேல் ஏறக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர். கட்டிடத்தின் நுழைவதற்கு முன்பு வெப்பநிலை கருவியால் அனைவரையும் சோதிக்க வேண்டும்" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரங்களில் அனைத்து கதவுகள், கைப்பிடிகளும் சுத்தப்படுத்தப்படுகின்றன. சுத்தம் செய்வோர் மிகுந்த கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக நெருக்கமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தனது DR தளத்தில்லிருந்து நேரடி வர்த்தகம் செய்தன. இது வெற்றிகரமாக முடிந்தது. இந்த DR பலன்கள்மும்பையின் முக்கிய உற்பத்தி தளத்தில் செயல்பாட்டின் பிம்பமாகும். இந்த பயிற்சி ஒரு மென்மையான முறையில் செய்யப்பட்டது. மற்றும் அதன் டிஆர் திறன்களின் வலிமையை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. இந்த முயற்சியில் சந்தையில் பங்கேற்பாளர்கள், வங்கிகள் ஆகியோரின் அன்றாட நடவடிக்கைகள் பாதிப்பு ஏற்படாமல் செய்யப்பட்டது.
பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ இரண்டுமே, தரகர்கள் தங்களது சேவையைத் தொடர்ந்து செய்ய வீட்டிற்கு மாற்ற அனுமதித்தன. தரகர்கள் தங்கள் சொந்த பி.சி.பி (BCP) திட்டத்தை இரு சந்தைகளுக்கும் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படியே அவர்கள் செயல்பட வேண்டும். தரகர்கள் தங்கள் சொந்த வாகனங்களை ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், செபி (SEBI) மற்றும் அரசாங்க அறிவிப்புகள் வைத்திருந்தாலும், காவலர்கள் தங்களுக்குத் தொல்லை தருவதாகச் சொல்கிறார்கள்.
லாக்டவுன் தளர்த்தப்படும் வரை வர்த்தகத்தை நிறுத்துமாறு தரகர்கள் சங்கம் ANMI பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.
Translated By P Ravindran