உங்கள் வீட்டில் சிலந்திகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதா? அப்படியெனில் உங்கள் ஊரில் வறண்ட வானிலையை எதிர்பார்க்கலாம்.

 

சிலந்திகள் அவற்றின் வலைகளை பின்னத் துவங்கினால், அது வறண்ட வானிலைக்கான அறிகுறி என ஒரு சொல்லாடல் உண்டு. சிலந்தி வலைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உணரும் திறன் கொண்டவை. ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, அவற்றின் வலைகள் அந்த ஈரப்பத்த்தினை உறிஞ்சி, சில சமயங்களில் உடையும் அளவு அவை கனமாகின்றன. சிலந்திகள் இதை அறிந்திருப்பதால் அதிக ஈரப்பதத்தை உணரும்போது, அவை வலையை பின்னாமல் மறைந்திருக்கும் இடங்களில் தங்கிவிடும்.

 

குளிர்காலம், வசந்த காலத்திற்கு வழிவகுக்கும் என்பதால், தென்னிந்தியாவில் வெப்பமயமான போக்கு வானிலை ஆர்வலர்களை வியக்க வைக்கிறது, கோடைகாலத்திற்கு முன்னால் இந்த இடைவெளி மிக விரைவாக முடிவுக்கு வரும். வசந்த காலம், கோடையின் வெப்பநிலையை முன்னறிவிக்கிறது.

 

வசந்த காலம் என்பது மறுபிறப்பை குறிக்கிறது. இயற்கையின் மறுபிறப்பு;  விலங்குகள் குளிர்கால உறக்கத்திலிருந்து எழுந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. மேலும் பறவைகள் வீடு திரும்புகின்றன.

 

கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும், அதனை ஒட்டிய மத்திய இந்தியா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவிலும் இன்று (புதன்கிழமை) ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று ஐபிஎம் வர்த்தக நிறுவனமான தி வெதர் கம்பெனி கூறுகிறது.

 

சென்னை காலையில் ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தது, இரவில் தெளிவாக காணப்படும் என்று சர்வதேச மாதிரிகள் கூறுகின்றன.

 

ஈரப்பதத்தின் அளவு இரவில் 60 சதவிகிதத்திற்கும் மேலாக உயரும் எனவும், இது சென்னை பெருநகரத்தின் வானிலையில் மேலும் வெப்பத்தை அதிகரிக்கும் என ஸ்கைமெட் வானிலை நிறுவனம் கூறுகிறது. அதிகபட்ச நாள் வெப்பநிலை சுமார் 30 டிகிரி செல்சியஸ் இருக்கும். புதுச்சேரிக்கும் ஏறக்குறைய இந்த தட்பவெப்ப நிலையே நிலவும்.

 

 

 

திருச்சிராப்பள்ளியில் மேகமூட்டம்

 

மேகமூட்டமான வானம் திருச்சிராப்பள்ளியை காலையில் வரவேற்றது. இது பிற்பகலில் ஓரளவு மேகமூட்டமாக மாறும். மதுரை ஓரளவு மேகமூட்டத்துடன் இருந்தது, நாள் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடியில் வெப்பம் குறைவாக இருக்கும், அதே நேரத்தில் சேலம் மற்றும் கோவையில் வெப்பநிலை33 டிகிரி செல்சியசாக இருக்கும். குன்னூரில் மழைக்கான வாய்ப்பு 30 சதவிகிதம், மேலும் வெப்பநிலை 20 டிகிரி செல்சியசாக இருக்கும்.

 

தமிழகத்திற்க்கான அமெரிக்க வானிலை நிறுவனத்தின் கண்ணோட்டம்

 

இன்று (புதன்கிழமை) காலை கீழைக்காற்றில் ஒரு குறைந்த காற்றழுத்த தொட்டி (Trough of low pressure) போன்ற அமைப்பு நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, இது தென்மேற்கு மத்திய பிரதேசத்தின் மீது தென்கிழக்கு கர்நாடகாவை நோக்கி மத்திய மகாராஷ்டிரா வழியாக ஒரு சுழற்சியால் இழுக்கப்படுகிறது.

 

சுற்றுச்சூழல் கணிப்புக்கான அமெரிக்க தேசிய மையத்தின்படி, தென் கேரளா மற்றும் அருகிலுள்ள தெற்கு மற்றும் உள் தமிழ்நாட்டில் இந்த வாரம் (பிப்ரவரி 5-12) சில இடங்களில் மழை பெய்யும். தென் கேரளா தமிழ்நாட்டை விட அதிக மழை பெறும்.

 

 

 

ஹரியானா மற்றும் பஞ்சாபில் குளிர் அலை நிலைகள்

 

வலுவான மேற்கத்திய இடையூறுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மேகங்கள் இல்லாததால் #பஞ்சாப் மற்றும் #ஹரியானாவில் #குளிர் அலை நிலை ஏற்படக்கூடும் என்று ஐபிஎம் நிறுவனமான தி வெதர் கம்பெனியின் கணிப்பு கூறுகிறது.

 

அருணாச்சல பிரதேசம் மற்றும் ஒடிசாவில் ஆங்காங்கே பனி அல்லது மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், அதே நேரத்தில் சிக்கிமில் பனி அல்லது மழை இருக்கும்.

 

அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, பீகார், உத்தரபிரதேசம், ஜம்மு & காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, புது தில்லி, ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம், குஜரா கோவா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

 

பல இடங்களில், குறிப்பாக புது தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மோசமாக அல்லது மிகவும் மோசமாக இருந்தது.

 

வங்காளவிரிகுடாவிலிருந்து ஈரப்பதம் நிறைந்த கீழைக்காற்று

 

மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் நாளை (வியாழக்கிழமை) வரை ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இது வறண்ட மேலைக்காற்றுடன், ஈரமான கீழைக்காற்று தொடர்புகொள்வதால் ஏற்படும் நிகழ்வு என ஐஎம்டி சுட்டிக்காட்டுகிறது. ஒரு புதிய, பலவீனமான புதிய மேற்கத்திய இடையூறு நாளை (வியாழக்கிழமை) முதல் வடமேற்கு இந்தியாவின் மலை பிரதேசங்களை பாதிக்கும்.

 

மேலைக்காற்றின் எதிர் நிகழ்வு தொடரும் என்பதால், கிழக்கு இந்தியாவில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், மேலும் நாளை (வியாழக்கிழமை) முதல் சனிக்கிழமை வரை மத்திய இந்தியாவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

IMG-3138JPG

A smattering of white clouds above the statue of British king Edward VII, at Cubbon Park in Bengaluru, on Wednesday. - Photo: GRN Somasekhar

 

 

தென்னிந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை

 

நேற்று (புதன்கிழமை), கொச்சி (கேரளா)வில் அதிகபட்ச வெப்பநிலை 37.2 டிகிரி செல்சியஸாகவும், கர்னால் (ஹரியானா)வில் மிகக் குறைந்த இரவு வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

 

அடுத்த ஐந்து நாட்களுக்கு வட இந்தியா, வட-மத்திய இந்தியா மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 1-4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்று தி வெதர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் மலைகளில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மிகவும் குளிராக இருக்கும்.

 

புதிய பலவீனமான மேற்கத்திய இடையூறு

 

பிப்ரவரி 10 வரை அடுத்த ஐந்து நாட்களுக்கு ஐஎம்டி கண்ணோட்டம்: வடமேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் இரவு வெப்பநிலை கிழக்கு இந்தியாவை விட 2-3 டிகிரி செல்சியஸ் உயரும். பிப்ரவரி 10-12ல், ஒரு புதிய பலவீனமான மேற்கத்திய இடையூறு வடமேற்கு இந்தியாவின் மலை பிரதேசங்களை பாதிக்கலாம்.  இது ஜம்மு-காஷ்மீர் மீது ஒரு சில இடங்களில் மழை அல்லது பனிப்பொழிவை கொடுக்கும், மேலும் கிழக்கு கடற்கரையிலும் வடகிழக்கு இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையை கொடுக்கும்.

 

உங்கள் ஊரில் வானிலை எப்படி இருக்கிறது?  படங்கள், வீடியோக்கள் மற்றும் உங்கள் கருத்தை ட்விட்டரில் @vinsonkurian என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.   இந்த நாள் இனிதாகட்டும்.

 

 

 

Translated by Srikrishnan PC