2005 ஆம் ஆண்டுக்கு பின் கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த மழை அளவு 63 சதவீதமாகும். பிராந்திய வாரியாக, தென்னிந்தியாவின் மழைப்பற்றாக்குறை (-21 சதவீதம்). மற்ற மூன்று பிராந்தியங்களும் அதிக மழைப்பொழிவைப் பெற்றுள்ளன.

84 சதவீதம் கூடுதலாக மழை பெற்று மத்திய இந்தியா முதலிடத்தில் உள்ளது; அதனைத் தொடர்ந்து வடமேற்கு இந்தியா 70 சதவீதம் கூடுதலாகவும்; மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மழை அளவு 51 சதவீதம் கூடுதலாக பதிவாகியிருப்பதாக தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் ஸ்கைமெட் வானிலை தெரிவித்துள்ளது.

ஸ்கைமெட் வானிலையின் நிர்வாக இயக்குனர் ஜதின் சிங் கூறுகையில், புது தில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய பெருநகரங்கள் ஜனவரி மாதத்தில் அதிகமான மழையை பெற்றுள்ளன. வடக்கு சமவெளி மற்றும் கிழக்கு இந்தியாவிலும் மழையின் பரவல் மற்றும் தீவிரம் விவசாயத்திற்க்கு உதவும் வகையில் மிகவும் சிறப்பாக உள்ளன. வடமேற்கு இந்தியாவின் மலைப்பகுதிகளில் உத்தரகண்ட் 235 சதவிகிதத்திற்கும் அதிகமான பனிப்பொழிவைப் பதிவு செய்தது.

கடலோர தமிழகத்தில் மேகமூட்டம்

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் செயற்கைக்கோள் படத்தில் திருநெல்வேலி, தொண்டி, மதுரை, திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், சேலம், புதுச்சேரி, வேலூர் மற்றும் சென்னை மற்றும் ஆகிய இடங்களில் மேகக்கூட்டங்கள் இருந்ததை காட்டியது.

திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம், மற்றும் ஸ்ரீகாகுளம் (ஆந்திரா); பிரம்மபூர், ராயகடா, புவனேஷ்வர், காமக்கியநகர், மற்றும் பவானிபட்னா (ஒடிசா); கோர்பா மற்றும் கப்சி (சத்தீஸ்கர்); ஷாஹ்தோல், ஜபல்பூர், சிந்த்வாரா (அடர்ந்த இடி மற்றும் மழை மேகங்கள்) மற்றும் பெத்துல் (மத்தியப் பிரதேசம்); கோண்டா (உத்தரப் பிரதேஷ்); அமராவதி, நாக்பூர், மற்றும் சந்திரபூர் (மகாராஷ்டிரா); மற்றும் ராமகுண்டம் மற்றும் வாரங்கல் (தெலுங்கானா) ஆகிய இடங்களிலும் மேகக்கூட்டங்கள் தென்பட்டது.

 

கிழக்கு மற்றும் வடகிழக்கில் மாறும் வானிலை நடவடிக்கைகள்

இந்த வாரம், வானிலை நடவடிக்கைகள் வடக்கிலிருந்து நாட்டின் கிழக்கு பகுதிகளுக்கு இடம் பெயர்கிறது, இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இரண்டு பலவீனமான மேற்கத்திய இடையூறுகளிலிருந்து வடமேற்கு மலை பிரதேசங்களுக்கு லேசான மழை மற்றும் பனிப்பொழிவை இது கொடுக்கும்.

குளிர்ந்த மற்றும் மூடுபனியுடன் கூடிய காலையுடன் வட இந்தியாவில் பரவலாக வெயில் இருக்கும்; சில இடங்களில் அடர்த்தியான மூடுபனி மற்றும் குளிர்ந்த இரவு வெப்பநிலை நிலவும்.

 

தென்னிந்தியாவில் முன்கூட்டியே கோடைக்காலம்?

வடகிழக்கில், வானிலை செயல்பாடு பெரும்பாலும் அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் இருக்க்க்கூடும், இது வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் தென் அசாம், மிசோரம் மற்றும் திரிபுரா வரை பரவும்.

தென்னிந்தியாவில், தென் தீபகற்பம் (முக்கியமாக கேரளா, தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா மற்றும் ஆந்திரா) பொதுவாக எந்தவொரு வானிலை நடவடிக்கைகளும் இருக்காது. இருப்பினும், குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடலோர தமிழகத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவில் வெப்பநிலை அதிகரிப்பு கோடைகாலத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது.

 

மத்திய இந்தியாவில் ரம்மியமான வானிலை

மத்திய இந்தியாவில், குஜராத்தில் வாரத்தின் இரண்டாவது பாதியில் வெப்பநிலையில் சிறிது சரிவுடன் ரம்மியமான வானிலை நிலவும். கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா போன்ற பிற பகுதிகளும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சில இடங்களில் ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கைப் பொறுத்தவரை, ஜார்கண்ட் மற்றும் வங்காளத்தில் இரண்டு கட்டங்களாக லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முதல் இன்று மற்றும் நாளை (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) மற்றும் இரண்டாவது, மற்றும் வியாழக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு இன்னும் தீவிரமான இருக்கும்.

 

 

IMG-3117jpg

A clear sky over the Visvesvaraya Towers in Bengaluru, on Tuesday. Photo: GRN Somashekar

 

அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கண்ணோட்டம்

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) இந்த (செவ்வாய்க்கிழமை) காலை, உள்வரும் மேற்கத்திய இடையூறு ஆப்கானிஸ்தானை அடைந்துள்ளது என்றும், இதனால் வடமேற்கு இந்தியாவின் (ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட்) மலைகளில் நாளை வரை ஆங்காங்கே மழை அல்லது ஒரு சில இடங்களில் பனிப்பொழிவும் காணப்படும்.

கிழக்கில் வங்காள விரிகுடாவிலிருந்து ஈரமான கீழைக்காற்றானது மேற்கு மற்றும் வடமேற்கு இந்தியாவிலிருந்து வீசும் குளிர்ந்த மற்றும் வறண்ட மேற்கு காற்றுடன் தொடர்பு கொள்ளும், இதன் விளைவாக மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய பெய்யும். கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நாளை (புதன்கிழமை) வரை ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

 

கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மழைக்கு வாய்ப்பு

பலவீனமான புதிய மேற்கத்திய இடையூறு வியாழக்கிழமை இரவு வடமேற்கு இந்தியாவின் மலைகளை பாதிக்கும், மேலும் இப்பகுதியில் வானிலை நடவடிக்கைகளை குறைந்தபட்சமாக இருக்கும். ஆனால் மீண்டும் கிழக்கு மற்றும் அதனுடன் மத்திய இந்தியாவில் வங்காள விரிகுடாவில் இருந்து வீசும் ஈரமான கீழைக்காற்று தொடர்ந்து குளிர்ந்த மற்றும் வறண்ட மேற்கு காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது, கிழக்கு இந்தியா மீது பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் மத்திய இந்தியாவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெய்யக்கூடும்.

 

Translated by Srikrishnan PC